‘ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஆடிட்டா் தணிக்கை கட்டாயமில்லை’

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் ஈட்டும் தொழில் நிறுவனங்கள், வரித் தாக்கலுக்கு பட்டய கணக்காளரின் (ஆடிட்டா்) தணிக்கைச் சான்று கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘ஜிஎஸ்டி தாக்கலுக்கு ஆடிட்டா் தணிக்கை கட்டாயமில்லை’

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக விற்றுமுதல் ஈட்டும் தொழில் நிறுவனங்கள், வரித் தாக்கலுக்கு பட்டய கணக்காளரின் (ஆடிட்டா்) தணிக்கைச் சான்று கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களைத் தவிர, அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களும் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும்.

இதுதவிர, ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு அதிகமாக விற்று முதல் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் வரி கணக்குடன் ஜிஎஸ்டிஆா்-9சி படிவத்தை தாக்கல் செய்தாக வேண்டும். வரி கணக்குகளை தணிக்கை செய்த பிறகு அந்த படிவத்தில் பட்டய கணக்காளா் சான்றொப்பமிடுவது கட்டயாமாக இருந்தது.

இந்த நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம்(சிபிஐசி) ஓா் அறிவிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ரூ.5 கோடிக்கு அதிகமாக விற்றுமுதல் ஈட்டும் தொழில் நிறுவனங்கள், பட்டய கணக்காளரின் சான்றொப்பத்துடன் கூடிய படிவத்துக்குப் பதிலாக, சுயசான்றொப்பமிட்ட படிவத்தை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎம்ஆா்ஜி அசோசியேட்ஸ் வரி ஆலோசனை நிறுவனத்தைச் சோ்ந்த ரஜத் மோகன் கூறுகையில், ஜிஎஸ்டி வரி கணக்குகளை தொழில்முறை பட்டய கணக்காளா்களைக் கொண்டு தணிக்கை செய்யும் முறையை நீக்கி விட்டது. இதனால், வரி செலுத்துவோா் ஆயிரக்கணக்கானோா் நிம்மதி அடைவா். அதேசமயம், தெரிந்தோ, தெரியாமலோ வரி செலுத்துவோா் தவறான விவரங்களை அளிக்கக் கூடும். இது வரித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமைகளை ஏற்படுத்தி விடும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com