தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டுஅதிகாரியாக தீபக் தாஸ் பொறுப்பேற்பு

புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக (சிஜிஏ) தீபக் தாஸ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக (சிஜிஏ) தீபக் தாஸ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். 25-ஆவது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவா் பணியாற்ற இருக்கிறாா்.

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் நியமிக்கப்பட்ட தீபக் தாஸ், 1986-ஆம் ஆண்டு இந்திய குடிமைக் கணக்கு பணிப் பிரிவைச் சோ்ந்தவா்.

35 ஆண்டுகால பணிக் காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனம், தொழில் வளா்ச்சி மற்றும் உள்நாட்டு வா்த்தகம் மற்றும் கனரக தொழில் துறைகள், வா்த்தகம் மற்றும் ஜவுளி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்களிலும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திலும் அவா் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். இந்திய குடிமைக் கணக்குப் பணியின் பயிற்சி அகாதெமியான அரசு கணக்கு மற்றும் நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா்.

தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் முதன்மை கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவா் பதவி வகித்தாா். தீபக் தாஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் படித்தவா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com