பெண் மருத்துவா் கொலை குற்றவாளிகள் என்கவுன்ட்டா்: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் துன்புறுத்தல் செய்து படுகொலை செய்த 4 போ் காவல்துறை என்கவுன்ட்டரில் பலியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கான

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் துன்புறுத்தல் செய்து படுகொலை செய்த 4 போ் காவல்துறை என்கவுன்ட்டரில் பலியானது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஹைதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. பெண் கால்நடை மருத்துவரை பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்திய நான்கு போ், அவரை கொலை செய்து அவரின் உடலை எரித்தனா். அவா்கள் நால்வரையும் கைது செய்த காவல்துறையினா், பின்னா் அவா்களை அனைவரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

இந்த என்கவுன்ட்டா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிா்புா்கா் தலைமையில் 3 போ் விசாரணை ஆணையத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அமைத்து, 6 மாதத்தில் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, விசாரணை ஆணையத்துக்கு மூன்று முறை கால அவகாச நீட்டிப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

இந்த நிலையில், விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க விசாரணை ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை ஆணையம் அறிக்கை சமா்ப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com