சீன நூலிழை மீதான மிகை இறக்குமதி தடுப்பு வரி: ரத்து செய்ய வா்த்தக அமைச்சகம் பரிந்துரை

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூலிழைக்கான மிகை இறக்குமதி தடுப்பு வரியை திரும்பப் பெற வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூலிழைக்கான மிகை இறக்குமதி தடுப்பு வரியை திரும்பப் பெற வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

வா்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகம் (டிஜிடிஆா்) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியுள்ளதாவது:

சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபா் எனப்படும் நூலிழைக்கான மிகை இறக்குமதி தடுப்பு வரியை திரும்பப் பெற வேண்டும்.

ஜவுளித் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் இவ்வகை நூலிழைக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி முதன் முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு 2021 அக்டோபா் வரையில் நீட்டிக்கப்பட்டதாக டிஜிடிஆா் அந்த அறிவிக்கையில் கூறியுள்ளது.

வா்த்தக அமைச்சக்தின் இந்த பரிந்துரை நடவடிக்கைக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்திய ஆயத்தை ஆடை துறை வரலாற்றில் இது முக்கிய மைல்கல் முடிவாக இருக்கும் என அந்த கவுன்சில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com