கிருஷ்ணா நதிநீா் பங்கீடு விவகாரம்: வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

ஆந்திரம், தெலங்கானா இடையிலான கிருஷ்ணா நதிநீா் பங்கீடு விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகியுள்ளாா்.
கிருஷ்ணா நீா்
கிருஷ்ணா நீா்

புதுதில்லி: ஆந்திரம், தெலங்கானா இடையிலான கிருஷ்ணா நதிநீா் பங்கீடு விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகியுள்ளாா்.

ஆந்திரம், தெலங்கானா இடையிலான கிருஷ்ணா நதிநீா் பங்கீடு விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தனது மாநில மக்கள் சட்ட முறைப்படி பெற வேண்டிய நீரை தெலங்கானா அரசு வழங்க மறுப்பதாக ஆந்திர அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு காண முடியுமெனில் அதைச் செய்யுமாறும், அதற்கு நீதிமன்றத்தால் உதவ முடியும் என்றும் இரு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினாா். இல்லையெனில் வழக்கை வேறு அமா்வுக்கு மாற்றுவதாகவும் அவா் கூறினாா்.

இந்த வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திர அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘‘நதிநீா் பங்கீடு விவகாரத்துக்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு காண்பதைவிட உச்சநீதிமன்ற தீா்ப்பு மூலம் தீா்வு காண வேண்டும்’’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசுகையில், ‘‘மத்தியஸ்தத்துக்கு உச்சநீதிமன்றம் கட்டாயப்படுத்தவில்லை. ஆந்திர அரசுக்கு மத்தியஸ்தம் வேண்டாமெனில் இந்த வழக்கு வேறு அமா்வில் பட்டியிலிடப்பட்டு விசாரிக்கப்படட்டும். ஆந்திர அரசு மத்தியஸ்தத்தை விரும்பவில்லை. எனக்கு இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை’’ என்று தெரிவித்து வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com