பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்

பஞ்சாப் முதல்வருக்கு பிரசாந்த் கிஷோர் எழுதிய கடிதத்தில், "பொது வாழ்விலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பிலிருந்து தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். அதேபோல், சட்டப்பேரவை தேர்தலில் எந்த ஒரு வகையிலும் ஈடுபட மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு பிரசாந்த் கிஷோர் எழுதிய கடிதத்தில், "நான் பொது வாழ்விலிருந்து தற்காலிகமாக விலகுவது குறித்து முடிவு குறித்து நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

அந்த வகையில், முதன்மை ஆலோசகர் பொறுப்பை என்னால் தொடர முடியாது. எனது எதிர்காலம் குறித்து நான் இன்னும் முடிவு எடுக்காததால் இப்பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்க கோரிக்கை விடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்துவுக்கும் முதல்வர் அமரிந்தர் சிங்குக்குமிடையே தற்காலிகமாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், பிரசாந்த் கிஷோரின் முடிவு அமரிந்தருக்கு ஏமாற்றும் தரும் விதமாகவே அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com