‘உ.பி. தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)
அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது:

முன்னதாக, 2022 பேரவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறியிருந்தேன். ஆனால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை பார்க்கும் போது வருகின்ற 400 தொகுதியில் கூட வெற்றி பெறுவோம்.

பாஜக செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்து, கடந்த சமாஜவாதி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களாகும். நான்கு ஆண்டுகளாக பாஜக எந்தவொரு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தவில்லை.

மேலும் பாஜகவின் அரசாங்கம், கரோனா மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதில், போலீஸ் காவலில் உயிரிழப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பது, வேலை கேட்கும் இளைஞர்களை அடிப்பது, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யனாதிற்கு மடிக்கணினி உபயோகிக்க தெரியாது என்ற காரணத்தால், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com