நகைப் பறிப்பில் ஈடுபட்ட  2 ராணுவ வீரர்கள் கைது 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் பெண்களிடம் நகையைப் பறித்த வழக்கில் இரண்டு ராணுவ வீரர்களை கைது செய்தது காவல்துறை.
நகைப் பறிப்பில் ஈடுபட்ட  2 ராணுவ வீரர்கள் கைது 
நகைப் பறிப்பில் ஈடுபட்ட  2 ராணுவ வீரர்கள் கைது 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் பெண்களிடம் நகைகளைப் பறித்த வழக்கில் இரண்டு ராணுவ வீரர்களை கைது செய்தது காவல்துறை.

விசாரணையில் நண்பர்களான காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஆகாஷ் குமார் மற்றும் நாசிக் பகுதியில் இருக்கும் ரவீந்தர் இருவரும்  பணி ஓய்வு நாட்களில் சேர்ந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெறும் சாகச உணர்விற்காக இதைச்  செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் இதுகுறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுராஜ் ராய் " இருவரும் தொடர்ந்து சில நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். விடுமுறைக்கு ஊருக்கு வந்து திருடிவிட்டு மீண்டும் பணிக்குச் சென்று சந்தேகம் வராத படி நடத்திருக்கிறார்கள். கடைசியாக ஈடுபட நகைப் பறிப்பில் இருவரின் முகமும் , பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தின் பதிவெண்ணும் சிசிடிவி கேமராவில் சரியாக பதிவாகியிருக்கிறது. முதலில் ஜுலை 11 ஆம் தேதி 60 வயது பெண்மணியிடம் நகையைப் பறித்தனர். அடுத்ததாக ஜுலை 24 பஜார் பகுதியில் மற்றொரு பெண்ணிடம் திருடியிருக்கிறார்கள். வெறும் 'த்ரில்' க்காக இதைச் செய்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் " எனத் தெரிவித்திருக்கிறார் .

கைதான ஆகாஷ் குமார் துப்பாக்கிச் சூடு வீரராகவும் , ரவீந்தர் 400 மீட்டர் தடகள வீரராக இருப்பதும்  குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com