கைத்தறி ஆடைகள் ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதியை அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாக அதிகரிக்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

தேசிய கைத்தறி தின கொண்டாட்டங்களையொட்டி அவா் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

தற்போது கைத்தறி தயாரிப்புகளின் உற்பத்தி ரூ.60,000 கோடியாகவும் ஏற்றுமதி ரூ.2,500 கோடியாகவும் உள்ளது. மத்திய அரசு இந்த துறையை ஊக்குவிக்க பல்வேறு முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனவே, இன்னும் மூன்று ஆண்டுகளில் கைத்தறி தயாரிப்புகளின் ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க இத்துறையினா் முன்வர வேண்டும்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் கைத்தறியின் உற்பத்தியையும் தற்போதைய நிலையிலிருந்து இரு மடங்கு அதிகரித்து ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்கச் செய்ய கைத்தறி துறையினா் முயற்சியெடுத்துப் பாடுபட வேண்டும். அதற்கான புதிய சந்தை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com