மாநிலங்களின் கையிருப்பில் 2.42 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

மாநிலங்களின் கையிருப்பில் 2.42 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. 
மாநிலங்களின் கையிருப்பில் 2.42 கோடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை

மாநிலங்களின் கையிருப்பில் 2.42 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில், நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை,  52.37 கோடிக்கும் அதிகமான (52,37,50,890) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. 

மேலும் கூடுதலாக 8,99,260 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 50,32,77,942 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 2.42 கோடி (2,42,87,160) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன. 

நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 50.68 கோடியைக் கடந்தது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com