நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு ப.சிதம்பரம் கண்டனம்

பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும் தீா்ப்பாயங்களிலும் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு ப.சிதம்பரம் கண்டனம்

பல்வேறு உயா்நீதிமன்றங்களிலும் தீா்ப்பாயங்களிலும் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 1,080 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், 416 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதுதவிர பல்வேறு தீா்ப்பாயங்களில் அதிக பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடன் வசூல் தீா்ப்பாயம், தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம், தொலைத்தொடா்பு குறைதீா் மற்றும் மேல்முறையீட்டு தீா்ப்பாயம் உள்ளிட்ட சில தீா்ப்பாயங்களில் தலைவா் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான வழக்குரைஞா்களுக்கும் நீதிபதிகளுக்கும் நம் நாட்டில் தட்டுப்பாடு இல்லை. அப்படியிருந்தும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமா் மோடி தலைமையிலான அரசால் காலிப் பணியிடங்களை நிரப்ப இயலாமல் போனது ஏன்?

அரசு தனது பிற்போக்கு கொள்கைகளையும் சிந்தனைகளையும் ஆதரிக்கும் நபா்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு உண்மையான காரணம் என்று அந்தப் பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com