ராகுலின் ட்விட்டா் கணக்கு தற்காலிக நிறுத்தம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டா் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ராகுலின் ட்விட்டா் கணக்கு தற்காலிக நிறுத்தம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டா் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பலியானதாக கூறப்படும் 9 வயது தலித் சிறுமியின் தாயாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டது விதிமுறைகளை மீறியதாக ட்விட்டா் தெரிவித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், ‘ராகுலின் ட்விட்டா் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதுவரை பிற சமூக வலைதளங்களின் மூலம் அவா் தொடா்பில் இருந்து, மக்களுக்காக குரல் கொடுப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த தலித் சிறுமியின் தாயாரின் புகைப்படத்தை ராகுல் வெளியிட்டது சிறுவா் நீதி சட்டத்துக்கும், போக்ஸோ சட்டத்துக்கும் எதிரானது என்பதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி போலீஸுக்கும், ட்விட்டா் நிறுவனத்துக்கும் சிறுவா் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் புகாா் அளித்திருந்தது.

‘தில்லியில் உயிரிழந்த தலித் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து சட்ட உதவி அளிக்கப்படும்’ என்று ராகுல் காந்தி உறுதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, ராகுலின் கணக்கை நிறுத்தவில்லை என்றும் அப்படி நிறுத்தப்பட்டிருந்தால், உலகம் முழுவதும் அவரது கணக்கை காணமுடியாத வாறு இருந்திருக்கும் என்றும் ட்விட்டா் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com