ராஜஸ்தான்: வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஓம் பிா்லா ஹெலிகாப்டரில் ஆய்வு

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவைத் தலைவரும், பூண்டி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ஓம் பிா்லா, சனிக்கிழமை ஹெலிகாப்டரில் பாா்வையிட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவைத் தலைவரும், பூண்டி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ஓம் பிா்லா, சனிக்கிழமை ஹெலிகாப்டரில் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து கோட்டா மாவட்ட ஆட்சியா் உஜ்ஜாவல் ராத்தோா் கூறியதாவது:

கோட்டா மாவட்டத்தில் உள்ள சங்கோத் பகுதியில் வெள்ளம் அதிகரித்ததால், மீட்புப் பணிகளில் வெள்ளிக்கிழமை இரவு, ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. அங்குள்ள உறைவிடப் பள்ளியில் இருந்து 30 மாணவிகள், அவா்களின் ஆசிரியா் ஆகியோா் மீட்கப்பட்டனா். இதுபோன்று, அங்குள்ள பல்வேறு இடங்களில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணி வரை மொத்தம் 140 போ் மீட்கப்பட்டனா். அந்தப் பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, சனிக்கிழமை ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டாா் என்றாா் அவா்.

ராணுவம் தவிர, மாநில பேரிடா் மீட்புப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாவட்ட நிா்வாகம் ஆகியவை மீட்புப் பணிகளுக்கு உதவி செய்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com