மூன்று ஆண்டுகளில் அமெரிக்க தரத்துக்குதேசிய நெடுஞ்சாலைகள்: கட்கரி நம்பிக்கை

தேசிய நெடுஞ்சாலைகள் இன்னும் மூன்று ஆண்டுகளில் அமெரிக்க தரத்துக்கு இணையாக மாறும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை
மூன்று ஆண்டுகளில் அமெரிக்க தரத்துக்குதேசிய நெடுஞ்சாலைகள்: கட்கரி நம்பிக்கை

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் இன்னும் மூன்று ஆண்டுகளில் அமெரிக்க தரத்துக்கு இணையாக மாறும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் தீஸா நகரில் அமைக்கப்பட்டுள்ள 3.75 கி.மீ தொலைவுக்கு மேம்படுத்தப்பட்ட நான்குவழித் தடத்தை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காணொலி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியின்போது கட்கரி தெரிவித்தது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பயனாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் அமெரிக்க தரத்துக்கு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த காலத்தில் நாளொன்றுக்கு 2 கி.மீ. அளவுக்கே சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது மோடி தலைமையிலான ஆட்சியில் நாளொன்றுக்கு 38 கி.மீ. அளவுக்கு சாலைப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, குஜராத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.25,370 கோடி மதிப்பில் 1,080 கி.மீ.க்கு சாலைக் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com