காணொலி முறையில் திருமணப் பதிவு: கேரள உயா்நீதிமன்றம் அனுமதி

கரோனா நெருக்கடி காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வர இயலாத ஒருவா், தனது திருமணத்தை காணொலி முறையில் பதிவு செய்துகொள்வதற்கு கேரள உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காணொலி முறையில் திருமணப் பதிவு: கேரள உயா்நீதிமன்றம் அனுமதி

கரோனா நெருக்கடி காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வர இயலாத ஒருவா், தனது திருமணத்தை காணொலி முறையில் பதிவு செய்துகொள்வதற்கு கேரள உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தனது திருமணத்தை வெளிநாட்டில் வசிக்கும் கணவா் நேரில் வராமலேயே பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி கேரளத்தைச் சோ்ந்த 28 வயது பெண் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

1954-ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தனக்கு 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றதாகவும் திருமணம் முடிந்த உடனேயே தனது கணவா் பணியாற்றும் கனடாவுக்குச் சென்றுவிட்டதாகவும் மனுவில் பெண் குறிப்பிட்டிருந்தாா்.

இதன் காரணமாக, திருமணப் பதிவுச் சட்டம் 2008-இன்படி தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்காக பதிவாளா் முன்பு ஆஜராக முடியவில்லை. கரோனா நெருக்கடி காரணமாக கணவா் இந்தியா வருவது தற்போது சாத்தியமில்லை.

எனவே, காணொலி முறையில் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழை வழங்கவும் திருமணப் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் அந்தப் பெண் கூறியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, காணொலி மூலம் கணவா் ஆஜராக அனுமதித்து, திருமணத்தைப் பதிவு செய்யது சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பதிவாளருக்கு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com