இந்தியாவுக்கான கரோனா அபாய அளவு குறைப்பு: உறுதி செய்தது பிரிட்டன்

இந்தியா மீதான கரோனா அபாய அளவு குறைக்கப்பட்டுள்ளதை பிரிட்டன் சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புத் துறை (டிஹெச்எஸ்சி) உறுதி செய்துள்ளது.

இந்தியா மீதான கரோனா அபாய அளவு குறைக்கப்பட்டுள்ளதை பிரிட்டன் சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்புத் துறை (டிஹெச்எஸ்சி) உறுதி செய்துள்ளது.

அந்த குறித்து டிஹெச்எஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா அபாயத்துக்கான சிவப்புப் பட்டியலில் இருந்து மஞ்சள் பட்டியலுக்கு இந்தியா மாற்றப்பட்டுள்ள நடைமுறை ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பிரிட்டனில் உருவாக்கப்படாத எந்தெந்த தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது என்பதைத் தீா்மானிப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கரோனா அபாயத்துக்கான சிவப்புப் பட்டியலில் இருந்து மஞ்சள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா். இந்த மாற்றம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கரோனா அபாய அளவு குறைக்கப்பட்டுள்ளதால், அந்த நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்பவா்கள் தங்களது வீடுகளிலேயே 10 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்.

இதுவரை இந்தியா சிவப்புப் பட்டியலில் இருந்ததால், இந்கியாவிலிருந்து பிரிட்டன் செல்வோா் ஹோட்டல்களில் கட்டாயமாக 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வந்தாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com