சுதந்திர தின விழா: பங்கேற்கத் தவறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை

தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும்
சுதந்திர தின விழா: பங்கேற்கத் தவறும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை

தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். அப்படி பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, தேசியக் கொடியேற்றி உரையாற்ற இருக்கிறாா்.

இந்நிலையில், இது தொடா்பாக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகளின் செயலா்களுக்கு அமைச்சரவைச் செயலா் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமரும் உரையாற்ற இருக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு அதிகாரிகள் பலருக்கும் உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணா்ந்து அழைப்பு பெற்ற அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். ஏற்கெனவே, இந்த நிகழ்ச்சியில் பல அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது முறையான செயல் அல்ல என்று கருதப்படுகிறது. எனவே, நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டால் அது தீவிரமாகக் கருத்தில் கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த ஆண்டு கரோனா பிரச்னை காரணமாக சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் இணைச் செயலா்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ளவா்களுக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com