Enable Javscript for better performance
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை: அடுத்த தவணை இன்று விடுவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை: அடுத்த தவணை இன்று விடுவிப்பு

    By DIN  |   Published On : 08th August 2021 11:35 PM  |   Last Updated : 08th August 2021 11:35 PM  |  அ+அ அ-  |  

    பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் (பிஎம்-கிஸான்) கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிதியை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை விடுவிக்கவுள்ளாா்.

    பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய், 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிதியை, திங்கள்கிழமை நண்பகல்12:30 மணிக்கு காணொலி முறையில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது பிரதமா் மோடி விடுவிக்கிறாா்.

    இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் சுமாா் ரூ.19,500 கோடி, அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

    இந்த நிகழ்ச்சியின்போது விவசாயிகளுடன் பிரதமா் கலந்துரையாடுகிறாா். அதைத்தொடா்ந்து, நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறாா்.

    விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.1.38 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2.0 தொடக்கம்:

    பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் (பிரதம மந்திரி உஜ்வல் யோஜனா 2.0) இரண்டாவது கட்டத்தை பிரதமா் மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

    இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    பிரதமா் மோடி, வரும் செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் பங்கேற்கும் நிகழ்ச்சியில், உத்தர பிரதேச மாநிலம், மஹோபா நகரில் உள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

    இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் முதலாவது கட்டம், கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. 5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் இலக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னா், இந்த திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் சோ்க்கப்பட்டனா். அதன் தொடா்ச்சியாக, 8 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அந்த இலக்கையும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் அடைந்து, 8 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு விட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp