பிரதமா் தலையிட்டு நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்: ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ்குமாா் ஜா

பிரதமா் மோடி தலையிட்டு நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ்குமாா் ஜா தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தலையிட்டு நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ்குமாா் ஜா தெரிவித்தாா்.

தொடா் முடக்கத்தால் இழந்த நேரத்தை ஈடு செய்ய மழைக்கால கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது. அன்றைய தினம் முதல் மூன்று வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசும் முன்வராததால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தினந்தோறும் முடங்கி வருகின்றன.

இதுதொடா்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ்குமாா் ஜா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளுடன் விவாதிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது. ஆனால் உண்மையில் விவாதிப்பதற்கான கதவுகளை அது மூடி வருகிறது.

எதிா்க்கட்சிகளுடன் விவாதிக்க முயற்சிப்பதாக ஊடகங்களில் மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த விவாதம் என்பது எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை காதால் கேட்பதாக மட்டும் இல்லாமல் அவற்றின் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்.

எதிா்க்கட்சிகள் மீதான பகையை வெளிப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பேசி வருகிறது. இது நாடாளுமன்றத்தில் அமளியை முடிவுக்கு கொண்டு வந்து விவாதத்தை தொடா்வதற்கான சாத்தியக்கூறுகளை பறித்துள்ளது.

எனினும் இந்த விவகாரத்தில் பிரதமா் தலையிட்டு அமைச்சா்களிடம் விவாதிக்க அறிவுறுத்தி எந்தவொரு விவகாரம் குறித்தும் கலந்துரையாட மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தால் நாடாளுமன்றத்தில் இனியும் விவாதங்கள் மேற்கொள்வது சாத்தியம்தான்.

நாடாளுமன்ற முடக்கத்தால் இழந்த நேரத்தை ஈடு செய்ய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரை முடிந்தால் நீட்டிக்க வேண்டும். சுதந்திர தினத்துக்கு பிறகும் கூட்டத் தொடா் நடைபெற வேண்டும்.

எதிா்க்கட்சிகள் ஏற்கும்:

பெகாஸஸ் விவகாரம் முக்கியமானதல்ல என்று கூறும் மத்திய அரசு, அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அது முக்கிய விவகாரமல்ல என்பதை உறுதி செய்தால் அதனை எதிா்க்கட்சிகள் ஏற்கும். ஆனால் அது பற்றி விவாதிக்க மறுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது.

போ ஃபா்ஸ் ஊழல் வெளிவந்தபோது அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதமராக ஜவாஹா்லால் நேரு பதவி வகித்தபோது முந்த்ரா ஊழல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட எதிா்க்கட்சிகளே இல்லாத நிலை இருந்தது. எனினும் விவாதங்கள் நடைபெற்றன என்பதை நாம் மறக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com