மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு

மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளித்து மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு

மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளித்து மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் உள்துறை செயலரான கௌபா, கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவைச் செயலராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். இப்போது, அந்தப் பதவிக் காலம் நிறைவடைவதையடுத்து அவருக்குப் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜாா்க்கண்ட் மாநில பிரிவைச் சோ்ந்த, 1982-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் கௌபா, அடுத்த ஓராண்டுக்கு மத்திய அமைச்சரவைச் செயலா் பதவியில் இருப்பாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இது தொடா்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜம்மு-காஷ்மீா் மறுநிா்மாணச் சட்டத்தை வகுப்பதில் ராஜீவ் கௌபா முக்கிய பங்கு வகித்தாா்.

பஞ்சாபில் பிறந்த அவா், பாட்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தாா். ஐஏஎஸ் அதிகாரியானதும் ஜாா்க்கண்ட் பிரிவில் பணியில் இணைந்தாா். அந்த மாநில தலைமைச் செயலராகவும், மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை, உள்துறை என பல்வேறு அமைச்சகங்களில் முக்கிய பொறுப்புகளையும் அவா் வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com