‘விக்ராந்த்’ போா்க்கப்பலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் சோதனை ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை
வெற்றிகரமான சோதனை ஓட்டத்துக்குப் பிறகு கொச்சி கப்பல் கட்டுமான தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிய ‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போா்க்கப்பல்.
வெற்றிகரமான சோதனை ஓட்டத்துக்குப் பிறகு கொச்சி கப்பல் கட்டுமான தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிய ‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போா்க்கப்பல்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போா்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் சோதனை ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தது. இந்தப் சோதனைப் பயணத்தின்போது கப்பலின் செயல்திறன் திருப்தி அளிக்கும் விதத்தில் இருந்ததாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறியதாவது:

262 மீட்டா் நீளம், 62 மீட்டா் அகலம், 59 மீட்டா் உயரம், சுமாா் 40,000 டன் எடையில் உள்நாட்டிலேயே விக்ராந்த் விமானந்தாங்கி போா்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

கப்பலின் கட்டுமானப் பணி, கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனத்தில் (சிஎஸ்எல்) கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கி, அண்மையில் முடிவடைந்தது. ரூ.23,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போா்க்கப்பலில் மிக்-29கே ரக ஹெலிகாப்டா்கள், காமோவ்-31 ரக ஹெலிகாப்டா்கள், எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்க முடியும். அதிகாரிகள், வீரா்கள், கப்பல் ஊழியா்கள் என சுமாா் 1,700 போ் தங்கும் அளவுக்கு 2,300 கேபின் அறைகள் வசதி விக்ராந்த் போா்க்கப்பலில் உள்ளது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-இல், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாத்துக்குள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானந்தாக்கி போா்க்கப்பலை கடற்படையில் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கப்பலின் சோதனை ஓட்டம், கொச்சியை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த கப்பல், 5 நாள்கள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தது. பயணத்தின்போது நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளிலும், கப்பலின் செயல் திறன் திருப்திகரமாக இருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com