நாடு திரும்பிய ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்பிய வீரர்களுக்கு தில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டிற்காக தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவை வரவேற்ற மக்கள் வெள்ளம்
நாட்டிற்காக தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவை வரவேற்ற மக்கள் வெள்ளம்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்பிய வீரர்களுக்கு தில்லி விமான நிலையத்தில் திங்கள் கிழமை மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்ன், ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், மகளின் ஹாக்கி அணி வீராங்கனைகள் உள்ளிட்டோரை உற்சாகமாக முழக்கமிட்டு வரவேற்றனர்.

மக்கள் வெள்ளத்தில் பஜ்ரங் புனியா
மக்கள் வெள்ளத்தில் பஜ்ரங் புனியா

விமான நிலையத்தில் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் விமான நிலைய வளாகத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வீரர்களை சந்திக்க குவிந்தனர்.பதக்க

பதக்கத்துடன் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா
பதக்கத்துடன் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா

அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். பின்னர் விளையாட்டு வீரர்களுடன் பொதுமக்கள் சுயப்படம் எடுத்துக்கொண்டனர். 

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல் - தங்கம்)

இறுதிச்சுற்றில் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்.

சாய்கோம் மீராபாய் சானு (பளுதூக்குதல் - வெள்ளி)

49 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் 202 கிலோ எடையை தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா்.

ரவிகுமாா் தாஹியா (மல்யுத்தம் - வெள்ளி)

57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு இறுதிச்சுற்றில் போராடித் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

பி.வி.சிந்து (பாட்மிண்டன் - வெண்கலம்)

அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் வெற்றி பெற்றாா்.

லவ்லினா போா்கோஹெய்ன் (குத்துச்சண்டை - வெண்கலம்)

69 கிலோ பிரிவில் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றாா்.

பஜ்ரங் புனியா (மல்யுத்தம் - வெண்கலம்)

65 கிலோ பிரிவில் அரையிறுதியில் தோற்று, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் வெற்றி பெற்றாா்.

ஆடவா் ஹாக்கி அணி (வெண்கலம்)

அரையிறுதியில் தோற்ற பிறகு 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் வென்று பதக்கத்துக்கான தாகத்தை தணித்துக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com