கோவா தேர்தல்: காங்கிரஸ் பார்வையாளராக ப.சிதம்பரம் நியமனம்

கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். 
ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து மேற்குறிப்பிட்ட மாநிலங்களில், கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் கட்சி சார்பில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, பார்வையாளர்களையும் அந்தந்த கட்சிகள் நியமித்து வருகின்றன. 

இந்நிலையில், கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பார்வையாளராக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திங்களன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான உத்திகள், பிரசாரம் மற்றும் தேர்தல் பனி ஒருங்கிணைப்பை அவர் மேற்பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோல மணிப்பூர் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com