வி. விஜயசாய் ரெட்டி (கோப்புப்படம்)
வி. விஜயசாய் ரெட்டி (கோப்புப்படம்)

ரூ. 2 லட்சம் கோடி கடன் சுமையை விட்டுச்சென்றது சந்திரபாபு நாயுடு அரசு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் கடன் சுமையுடன் மாநிலத்தை விட்டுச்சென்றதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜயசாய் ரெட்டி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்


ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல் கடன் சுமையுடன் மாநிலத்தை விட்டுச்சென்றதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வி. விஜயசாய் ரெட்டி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து விஜயசாய் ரெட்டி மேலும் தெரிவித்தது:

"சந்திரபாபு நாயுடு அரசு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேலான கடன் சுமையுடன் மாநிலத்தை விட்டுச்சென்றது. ஆந்திரத்தின் கடன் ரூ. 3.7 லட்சம் கோடி. 

இதுவே உத்தரப் பிரதேசத்தில் ரூ. 6 லட்சம் கோடி, மகாராஷ்டிரத்தில் ரூ. 5 லட்சம் கோடி, தமிழகத்தில் ரூ. 4.8 லட்சம் கோடி, தெலங்கானாவில் ரூ. 3.2 லட்சம் கோடி, கேரளத்தில் ரூ. 3.2 லட்சம் கோடி கடன் உள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com