பெகாஸஸ் எதிரொலி: மாநிலங்களவையில் விவசாயிகளின் பிரச்னை குறித்த விவாதம் முடங்கியது

நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாயப் பிரச்சனைகள் குறித்த விவாதம் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் பெகாஸஸ் விவகாரத்தால் அவை முடங்கியுள்ளது. 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாயப் பிரச்சனைகள் குறித்த விவாதம் இன்று பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் பெகாஸஸ் விவகாரத்தால் அவை முடங்கியுள்ளது.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இன்று 16 ஆவது நாளாக இரு அவைகளும் தொடங்கின. இதில் மாநிலங்களவையில் இன்றைய விவாதப் பட்டியலில் 'விவசாயப் பிரச்னைகள் பற்றிய விவாதம்' பட்டியலிடப்பட்டிருந்தது. 

விவாதத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பிரதாப் சிங் பாஜவா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. 'விவசாயப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்' பற்றிய குறுகிய கால விவாதம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனினும், இன்று காலை எதிர்க்கட்சிகள் பெகாஸஸ் விவகாரத்தை கையில் எடுத்ததால் பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவையை ஒத்திவைப்பதற்கு முன், அவைத்  தலைவர் வெங்கையா நாயுடு, 'இந்த அவை விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்ற செய்தி மக்களுக்கு சேரக்கூடாது, அவை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த நவம்பர் முதல் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com