பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு 10% இடஒதுக்கீடு: 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமல்

பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் பிரதிமா பெளமிக் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், கோவா, ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், அஸ்ஸாம், மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும் தில்லி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவா், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசு பணியிடங்களை நிரப்பும் பணிகளை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை கண்காணித்து வருகிறது.

பட்டியலினத்தவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 28,435 பணியிடங்களில் 14,366 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட 22,016 பணியிடங்களில் 12,612 பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 28,562 பணியிடங்களில் 15,088 பணியிடங்களும் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com