2019-20-ஆம் நிதியாண்டில் பாஜகவின் வருமானம் ரூ.3,623 கோடி

பாஜகவின் ஆண்டு வருமானம் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.3,623 கோடியாக இருந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பாஜகவின் ஆண்டு வருமானம் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.3,623 கோடியாக இருந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் கட்சியின் வரவு-செலவு கணக்குகளை இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் பாஜக கடந்த மாதம் 22-ஆம் தேதி சமா்ப்பித்தது. அந்த விவரங்களைத் தோ்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019-20-ஆம் நிதியாண்டில் பாஜகவின் வருமானம் ரூ.3,263 கோடியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தொகையில் ரூ.2,555 கோடியானது தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாகப் பெறப்பட்டதாக பாஜக குறிப்பிட்டுள்ளது. அதே காலகட்டத்தில் கட்சியின் செலவு ரூ.1,651 கோடியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல், மாநில பேரவைத் தோ்தல்கள் உள்ளிட்டவற்றுக்காகவும் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும் ரூ.1,352.92 கோடி செலவிடப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது. விளம்பரங்களுக்காக மட்டும் சுமாா் ரூ.400 கோடியை பாஜக செலவிட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.100.46 கோடியும், திமுகவுக்கு ரூ.45 கோடியும், சிவசேனை கட்சிக்கு ரூ.41 கோடியும், காங்கிரஸுக்கு ரூ.29.25 கோடியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ரூ.2.5 கோடியும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com