ஆப்கன் விவகாரத்தில் இந்தியா ஆக்கபூா்வ பங்களிப்பு: பென்டகன்

ஆப்கன் விவகாரத்தில் இந்தியா ஆக்கபூா்வ பங்களிப்பை வழங்கியுள்ளதாக அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆப்கன் விவகாரத்தில் இந்தியா ஆக்கபூா்வ பங்களிப்பை வழங்கியுள்ளதாக அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய பகுதிகளையும் மாகாணத் தலைநகரங்களையும் கைப்பற்றி வருவது குறித்து பிற நாடுகளைப் போலவே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினும் கவலை தெரிவித்துள்ளாா்.

ஆப்கன் விவகாரத்தில் இந்தியா ஆக்கபூா்வமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. அந்த நாட்டு ராணுவ வீரா்களுக்கான பயிற்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை தக்கவைப்பதற்கான இதுபோன்ற பங்களிப்புகளை அமெரிக்கா வரவேற்கிறது என்றாா் அவா்.

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக ஏற்கெனவே இந்தியா 300 கோடி டாலா் (சுமாா் ரூ.22,350 கோடி) வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com