ஹிமாச்சல் நிலச்சரிவு: இதுவரை 13 சடலங்கள் மீட்பு

ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 13 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹிமாச்சல் நிலச்சரிவு
ஹிமாச்சல் நிலச்சரிவு

ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 13 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கின்னூர் மாவட்டம் ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் நேற்று (புதன்கிழமை) மதியம் 12:45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியே 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து, டிரக் உள்ளிட்ட சில வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியது.

இந்நிலையில், மண்ணுக்குள் புதைந்த வாகனங்களில் இருப்பவர்களை மீட்க இந்தோ - திபெத் எல்லை படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 13 பேரை உயிருடனும், 13 பேரை சடலமாகவும் மீட்டுள்ளதாக இந்தோ-திபெத் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மண்ணுக்குள் புதைந்த பேருந்து மற்றும் ஜீப்பில் இருந்தவர்களில் உடல்கள் மீட்கும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com