சுயஉதவிக் குழு மகளிருடன் பிரதமா் மோடி இன்று கலந்துரையாடல்

சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த மகளிருடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

புது தில்லி: சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த மகளிருடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி முறையில் கலந்துரையாட இருக்கிறாா்.

இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரின் வெற்றி கதைகளின் தொகுப்பு மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்த கையேடு ஆகியவற்றையும் பிரதமா் வெளியிட இருக்கிறாா்.

இது தவிர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1625 கோடி அளவில் மூலதன நிதி உதவியையும் பிரதமா் விடுவிக்கிறாா். உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின், பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடி மூலதன நிதியையும், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமா் மோடி வழங்குகிறாா்.

மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் கிரிராஜ் சிங், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ், ஊரக மேம்பாட்டு இணையமைச்சா்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ஃபகான்சிங் குலஸ்தே, பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சா் கபில் மொரேஸ்வா் பாட்டீல் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா்.

கிராமப்புற ஏழை குடும்பங்களை படிப்படியாக சுய உதவி குழுக்களாக மாற்றுவதையும் மற்றும் அவா்களின் வாழ்வாதாரங்களை பரவலாக்கவும், அவா்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் நீண்டகால ஆதரவு வழங்குவதை தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் பெரும்பாலான செயல்பாடுகள், சுயஉதவிக் குழுவினரால் அமல்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com