உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் ஓய்வு

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று ஓய்வு பெறுகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று ஓய்வு பெறுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியும் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவருமான நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்றுடன் (வியாழன்கிழமை) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, நாரிமனின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட பல்வேறு நீதிபதிகள் அவருக்கு புகழாரம் சூட்டினர். 

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "நீதித்துறையை பாதுகாத்த ஒரு சிங்கத்தை இழந்தது போல் உணர்கிறேன். புலமை, தெளிவு, அறிவு என அனைத்திலும் சிறப்புமிக்கு விளங்கியவர். நாரிமன் ஓய்வு பெறுவதால் நீதித்துறைக்கு பேரிழப்பு. 

வலிமையான நீதித்துறையின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் நாரிமன். நியாத்திற்கு எப்போதும் துணை நிற்பவர். நான் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்" என்றார்.

கடைசி பணி நாள் என்பதால் நீதிமன்ற வழக்கப்படி, ஒன்றாவது நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் நாரிமன் இன்று அமர்ந்திருந்தார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற நீதிபதி நாரிமன், 35 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றினார்.

புகழ்பெற்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமனின் மகனான ரோஹின்டன் நாரிமனை அவரது 35ஆவது வயதில் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. பின்னர், 2011ஆம் ஆண்டு, சொலிசிட்டர் ஜெனரலாக அவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நாரிமன் நேரடியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, நான்கு பேர்தான் இப்படி நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். 13,565 வழக்குகளுக்கு நாரிமன் நீதிபதியாக இருந்து தீர்ப்பளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com