Enable Javscript for better performance
25% கட்டாய இடஒதுக்கீட்டில் விலக்கு: ரூ.2,500 கோடியை சேமிக்கும் கிறிஸ்தவப் பள்ளிகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    25% கட்டாய இடஒதுக்கீட்டில் விலக்கு: ரூ.2,500 கோடியை சேமிக்கும் கிறிஸ்தவப் பள்ளிகள்

    By DIN  |   Published On : 13th August 2021 12:14 AM  |   Last Updated : 13th August 2021 12:14 AM  |  அ+அ அ-  |  

    பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு மொத்த இடங்களில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், நாட்டில் உள்ள சுமாா் 13,000 கிறிஸ்தவப் பள்ளிகள் ஆண்டுக்கு ரூ.2,500 கோடியை சேமித்து வருவதாக தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    அரசு உதவி பெறாத தனியாா் பள்ளிகள், மொத்த இடங்களில் 25 சதவீதத்தைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டது. அவ்வகை இட ஒதுக்கீடு பெற்ற மாணவா்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தனியாா் பள்ளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

    இந்தக் கட்டாய இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவா்கள் பலனடைந்து வருகின்றனா். ஆனால், இந்தக் கட்டாய இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிறுபான்மையின பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கட்டாய இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் சிறுபான்மையின பள்ளிகள் அடையும் பலன்கள் குறித்து தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.

    அந்த ஆய்வின் அடிப்படையில் ஆணையம் அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில், தனியாா் பள்ளிகளில் தொடக்கப் பள்ளி மாணவா்கள் கல்வி பெறுவதற்கான செலவு சராசரியாக ரூ.18,267-ஆக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 12,904 கிறிஸ்தவப் பள்ளிகளில் 54,86,884 மாணவா்கள் கல்வி பயின்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் கணக்கிட்டால் மாணவா்களிடமிருந்து ரூ.10,022.89 கோடியை கிறிஸ்தவப் பள்ளிகள் கல்விக் கட்டணமாக வசூலிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய இடஒதுக்கீடு அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் ரூ.2,505.72 கோடியை அப்பள்ளிகள் சேமித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டத் திருத்தம் அவசியம்:

    இது தொடா்பாக தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் பிரியங்க் கானுங்கோ கூறுகையில், ‘‘பெரும்பாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கே சிறுபான்மையின பள்ளிகள் கல்வி கற்பித்து வருகின்றன.

    சிறுபான்மையின பள்ளிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காகக் கட்டாய இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும். இது தொடா்பாக சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்’’ என்றாா்.

    கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் 74.01 சதவீதம் போ் கிறிஸ்தவ மதத்தைச் சாராதவா்கள் என்றும், பல மாநிலங்களில் இது 80 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளதாகவும் தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp