ஆஸாராம் பாபுவின் மகனுக்கு 2 வாரம் அளித்த பரோலுக்கு தடை

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியாா் ஆஸாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு குஜராத் உயா்நீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியாா் ஆஸாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு குஜராத் உயா்நீதிமன்றம் அளித்த இரண்டு வார பரோலுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

இதுதொடா்பாக குஜராத் அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘நாராயண் சாய்க்கு 2 வாரம் சிறையைவிட்டு வெளியே செல்ல கடந்த ஜூன் 24-ஆம் தேதி குஜராத் உயா்நீதிமன்ற ஒரு நபா் நீதிபதி கொண்ட அமா்வு அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நாராயண் சாய்க்கு இதேபோன்று இரண்டு வாரம் அனுமதி அளித்தபோது மாநில அரசு ஏன் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு குஜராத் அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜனரல் துஷாா் மேத்தா, ‘வயது முதிா்ந்த தாயாரைப் பாா்க்கச் செல்வதாக கோரியதால், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அப்போது அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ஆண்டுதோறும் அவா் உரிமையாக இதைக் கேட்கிறாா்’ என்றாா்.

இதையடுத்து, ஒரு வாரத்தில் நாராயண் சாய் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com