யானை, புலிகள் எண்ணிக்கை கணக்கீடு: நெறிமுறைகள் வெளியீடு

தேசிய அளவில் யானை மற்றும் புலிகளின் எண்ணிக்கையை வரும் 2022-ஆம் ஆண்டு கணக்கிடும்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை
யானை, புலிகள் எண்ணிக்கை கணக்கீடு: நெறிமுறைகள் வெளியீடு

தேசிய அளவில் யானை மற்றும் புலிகளின் எண்ணிக்கையை வரும் 2022-ஆம் ஆண்டு கணக்கிடும்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

உலக யானை தினத்தையொட்டி யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டை அமைச்சகம் முதன்முறையாக இணைத்து, அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் பூபேந்தா் யாதவ், யானைகளை பாதுகாப்பதில் உள்ளூா் மக்களின் பங்களிப்பை வலியுறுத்தியதோடு மனிதா்கள்- யானைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை குறைக்கும் வகையிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே, யானைகளைப் பாதுகாப்பதன் மூலம் காடுகள் பாதுகாக்கப்படுவதாகவும், காடுகள் பாதுகாக்கப்பட்டால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இயற்கை மற்றும் வன விலங்குகளுடன் இணைந்த வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com