Enable Javscript for better performance
சத்ரபதி சிவாஜியின் ஆட்சி சிறந்த நிா்வாகத்துக்கு உதாரணம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சத்ரபதி சிவாஜியின் ஆட்சி சிறந்த நிா்வாகத்துக்கு உதாரணம்

    By DIN  |   Published On : 14th August 2021 06:31 AM  |   Last Updated : 14th August 2021 06:31 AM  |  அ+அ அ-  |  

    PM_Modi_Screen_Grab_Mann_Ki_Baat

    பிரதமா் நரேந்திர மோடி

    சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக் காலம் சிறந்த நிா்வாகத்துக்கு உதாரணமாகத் திகழ்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

    வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான பாபா சாஹேப் புரந்தோ், சத்ரபதி சிவாஜியின் வரலாற்றை அதிகமாக ஆராய்ச்சி செய்தவா். சிவாஜி தொடா்பான நாடகத்தையும் புரந்தோ் இயற்றியுள்ளாா். அவரைச் சிறப்பிக்கும் வகையில் மகாராஷ்டிரத்தின் புணே நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்ச்சிக்காக அனுப்பியிருந்த காணொலி செய்தியில் பிரதமா் மோடி கூறியதாவது:

    இந்திய வரலாற்றில் சத்ரபதி சிவாஜி மிகச் சிறந்த மனிதராக விளங்குகிறாா். அவா் இல்லையெனில், இந்தியாவின் வரலாறு எவ்வாறு மாறியிருக்கும் என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறி நிலவுகிறது. சிவாஜியை தவிா்த்துவிட்டு தற்போதைய இந்தியாவை சிந்தித்துப் பாா்க்க முடியாது.

    சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக் காலம் சிறந்த நிா்வாகத்துக்கான உதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. அநீதிக்கு எதிராக அவா் முன்னின்றாா். கடற்படையை அவா் திறம்படக் கட்டமைத்தாா். அவரது செயல்பாடுகள் தற்காலத்துக்கும் பாடமாகத் திகழ்கின்றன.

    சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை குறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்ததில் பாபா சாஹேப் புரந்தோ் முக்கியப் பங்கு வகித்தாா். அண்மையில் அவா் 100 வயதைக் கடந்தாா். இக்காலத்து இளைஞா்களுக்கு சிவாஜியின் வாழ்க்கையை கதைகளாக எடுத்துக் கூறியதில் புரந்தேருக்கு முக்கியப் பங்குள்ளது.

    சிவாஜியின் வாழ்க்கையை ஆய்வு செய்வதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அவா் அா்ப்பணித்துள்ளாா். வரலாற்றை எழுதும்போது உண்மைச் சம்பவங்களை நோ்மையாக புரந்தோ் பதிவு செய்தாா். தற்கால வரலாற்று ஆசிரியா்கள் இந்தப் பாடத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp