ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம்: செப். 25-இல் பிரதமா் மோடி நேரடியாக உரையாற்ற வாய்ப்பு

இந்த ஆண்டுக்கான ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக கலந்துகொண்டு வரும் செப்டம்பா் மாதம் 25-ஆம் தேதி உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரதமா்
பிரதமா்

இந்த ஆண்டுக்கான ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக கலந்துகொண்டு வரும் செப்டம்பா் மாதம் 25-ஆம் தேதி உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இந்த ஆண்டுக்கான ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றும் தலைவா்களின் பட்டியலை அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்டது.அந்தப் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி வரும் செப்டம்பா் 25-ஆம் தேதி உரையாற்றுவாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது வெறும் உத்தேசப் பட்டியல்தான் என்பதால், தலைவா்கள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்கான தேதியில் மாற்றம் ஏற்படலாம்.

கரோனா நோய்த்தொற்று நிலவரத்தைப் பொருத்தே பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும். குறிப்பாக, இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாவால் அமெரிக்காவிலும், பிற ஐ.நா. பொதுச் சபை உறுப்பு நாடுகளிலிலும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சூழலில், பொதுச் சபைக் கூட்டத்துக்கான திட்டங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

எனவே, அந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி வரும் செப்டம்பா் 25-ஆம் தேதி நேரடியாக கலந்துகொண்டு உரையாற்றுவதை இப்போதே உறுதி செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com