'எங்கள் உறவினர்கள் பயத்துடன் இருக்கின்றனர்' - மீட்கக் கோரும் இந்திய வாழ் ஆப்கானியர்கள்!

தற்போது ஆப்கனில் வாழும் தங்களது உறவினர்கள் பயத்தில் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்தியா உடனடியாக விசா வழங்க வேண்டும் என இந்திய வாழ் ஆப்கானியர்கள் தெரிவித்துள்ளனர். 
'எங்கள் உறவினர்கள் பயத்துடன் இருக்கின்றனர்' - மீட்கக் கோரும் இந்திய வாழ் ஆப்கானியர்கள்!

தற்போது ஆப்கனில் வாழும் தங்களது உறவினர்கள் பயத்தில் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்தியா உடனடியாக விசா வழங்க வேண்டும் என இந்திய வாழ் ஆப்கானியர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பல்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் அங்கு சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. 

இதுகுறித்து தில்லியில் வசிக்கும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஷாகேப் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

தற்போது ஆப்கானிஸ்தானில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசு ஆப்கானியர்களுக்கு இங்கு வருவதற்கு விசா வழங்க வேண்டும் என்றார். 

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துல், 'நான் ஒரு கண் மருத்துவராக இருந்தேன். ஒருமுறை தலிபான்கள் தங்கள் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி என்னிடம் கேட்டார்கள் ஆனால் நான் அவர்களுக்கு உதவ மறுத்தேன். அஷ்ரப் கனி, ஆப்கன் மக்களுக்கு தவறிழைத்துவிட்டார் என்றார்.

ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தான் மக்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com