மத்திய சுகாதாரத் துறையுடன் கேரள முதல்வர், வீணா ஜார்ஜ் ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மத்திய சுகாதாரத் துறையுடன் கேரள முதல்வர், சுகாதாரத் துறை ஆலோசனை
மத்திய சுகாதாரத் துறையுடன் கேரள முதல்வர், சுகாதாரத் துறை ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நாட்டில் அதிக அளவில் கேரளத்தில் கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முதல்வர் பினராயி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், கரோனா நிலவரம் குறித்தும், கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேசிய அமைச்சர் மாண்டவியா, கேரளத்தில் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 10 கிலோ மருத்துவ ஆக்சிஜன் சேமித்து வைக்கும் திறன் கொண்ட வகையில் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன. 

கரோனா அவசரகால நிவாரணமாக கேரளத்திற்கு ரூ.267.5 கோடி மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை கேரள அரசின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த உதவும். மேலும் மருந்துகளுக்காக கேரளத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதலாக ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com