ஆப்கனில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். 
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் வசமானதால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறும் முனைப்பில் உள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக நேற்று தாயகம் அழைத்து வரப்பட்டனர். மேலும், அங்குள்ள இந்தியர்களை மீட்க இன்று ஏர் இந்தியா விமானம் தில்லியில் இருந்து புறப்படவிருந்த நிலையில் ஆப்கனில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்தியர்களை மீட்க தன்னுடைய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com