எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா: அழைப்பை ஏற்றார் மு.க. ஸ்டாலின்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் காணொலி வாயிலான கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் காணொலி வாயிலான கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஆகஸ்ட் 20-ம் தேதி காணொலி வாயிலான கூட்டத்துக்கு சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கான அழைப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அங்கமாகவே இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com