
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி (ஆக. 20) குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அவருக்கு மரியாதை செலுத்தினா்.
1984-89 காலகட்டத்தில் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, 1991-இல் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டாா்.
அவரது பிறந்த நாளையொட்டி குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவில் தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடா்புத் துறை, கல்வி ஆகியவற்றின் வளா்ச்சிக்கு ராஜீவ் காந்தி செலுத்திய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது 77-ஆவது பிறந்த தினத்தில் நினைவுகூா்ந்து மரியாதை செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.