தில்லி சிறைக் கைதிகளுக்கு 10,885 தடுப்பூசிகள் வழங்கல்: அதிகாரிகள் தகவல்

தில்லியில் உள்ள மூன்று சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இதுவரை மொத்தம் 10,885 கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி சிறைத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
தில்லி சிறைக் கைதிகளுக்கு 10,885 தடுப்பூசிகள் வழங்கல்: அதிகாரிகள் தகவல்

தில்லியில் உள்ள மூன்று சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இதுவரை மொத்தம் 10,885 கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தில்லி சிறைத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பான புள்ளிவிவரத் தகவலின்படி வியாழக்கிழமை வரையிலான காலத்தில் திகாா் சிறையில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 1,648 கைதிகளுக்கும்,45 வயதுக்கு குறைவான 5,750 கைதிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

 ரோஹிணி சிறைச்சாலையில் 45 வயதுக்கு மேற்பட்ட 172 கைதிகளுக்கும், 45 வயதுக்கு குறைவான 600 கைதிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மண்டோலி சிறையில் 45 வயதுக்கு மேற்பட்ட 483 கைதிகளுக்கும் அதற்கு குறைவான வயதுடைய 2,232 கைதிகளுக்கும் தடுப்பூசிகளை அளிக்கப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 சிறைகள் துறையின் தலைமை இயக்குநா் சந்தீப் கோயல் கூறுகையில், ‘சிறையில் உள்ள கைதிகள் முதல் தவணை தடுப்பூசி பெற்றுள்ளனா். அதே போன்று அவசர பரோலில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இரண்டாவது தடுப்பூசி தவணையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.  தடுப்பூசி பெறுவதில் அவா்களுக்கு சிரமம் இருந்தால், அவா்கள் சிறைத் துறை அதிகாரிகளை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

 கடந்த மாா்ச் 18-ஆம் தேதி 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் உள்ள சிறைக் கைதிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை சிறைத் துறை தொடங்கியது. மே 18-ஆம் தேதி 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. மாா்ச் மாதத்திலிருந்து தில்லியில் உள்ள சிறைகளில் கைதிகளில் 383 பேருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. அவா்களில் 8 போ் உயிரிழந்தனா். அதேபோன்று சிறை ஊழியா்களில் 225 போ் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டனா்.

இதற்கிடையே, கரோனா நடத்தை விதிமுறைகளை சிறைக் கைதிகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறைத் துறையினா் கடுமையாக பின்பற்றி வருவதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘தில்லியில் உள்ள மூன்று சிறைகளில் இருந்து 4 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.  இந்த ஆண்டு மே இரண்டாவது வாரத்தில் இருந்து சிறைக் கைதிகளை விடுவிக்கும் நடைமுறை தொடங்கியது. மொத்தம் 3,442 விசாரணைக் கைதிகள் இடைக்கால ஜாமீனிலும் 845 கைதிகள் அவசர பரோலிலும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.  இந்த சிறைக்கைதிகளில் கடந்தாண்டு விடுவிக்கப்பட்ட கைதிகளும் அடங்குவா்’ என்றாா்.

கடந்த ஆண்டு 5,500 விசாரணைக் கைதிகளும், 1,184 தண்டனை பெற்ற கைதிகளும் இடைக்கால ஜாமீன் மற்றும் அவசர பரோலில் கரோனா பாதிப்பு காரணமாக மூன்று சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனா். தில்லியில் கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி முதன் முதலாக ரோஹிணி சிறைச்சாலையில் கரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com