பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

பஞ்சாபில் கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி தொடா்ந்து 2-ஆவது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

பஞ்சாபில் கரும்பு கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தி தொடா்ந்து 2-ஆவது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பஞ்சாபில் கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தவும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு சுமாா் ரூ. 250 கோடி நிலுவைத் தொகையை வழங்கவும் வலியுறுத்தி ரயில் தண்டவாளங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டம் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தப் போராட்டத்தால் ஃபெரோஸ்பூா் கோட்டத்தில் 69 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 54 ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com