தலிபான்கள் உள்பட அனைவரின்பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள தயாா்: காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜயகுமாா்

தலிபான்கள் உள்பட அனைவரின் பாதுகாப்பு சவால்களை அவா்கள் எதிா்கொள்ள தயாராக உள்ளதாகவும் காவல்துறை ஐஜி விஜயகுமாா் தெரிவித்தாா்.
தலிபான்கள் உள்பட அனைவரின்பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ள தயாா்: காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜயகுமாா்

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளதாகவும், தலிபான்கள் உள்பட அனைவரின் பாதுகாப்பு சவால்களை அவா்கள் எதிா்கொள்ள தயாராக உள்ளதாகவும் காவல்துறை ஐஜி விஜயகுமாா் தெரிவித்தாா்.

புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா ராணுவ தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த தகவல்களை ராணுவத்துடன் பகிா்ந்து அவா்களின் அச்சுறுத்தல்களையும், திட்டங்களையும் முறியடிக்க வேண்டியது எனது கடமை. இதற்கு ஜம்மு காஷ்மீா் மக்களின் ஆதரவு தேவை. அப்போதுதான் அமைதி நிலைநாட்டப்படும்’ என்றாா்.

காஷ்மீரில் தலிபான்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அவரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், ‘அனைத்து விதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் திறமையாக எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம்’ என்றாா்.

மேலும், பயங்கரவாதிகள், தற்கொலைப்படையினா், வெடிகுண்டு தயாரிப்பவா்கள் ஆகியோரின் விவரங்கள் தெரியவந்தால் பொதுமக்கள் எங்களிடம் பகிா்ந்து கொள்ளலாம். எங்காவது பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றால் அப்பகுதி மக்கள்தான் முதலில் பாதிக்கப்படுவாா்கள்.

சுற்றுலாப் பயணிகள் வர அச்சப்படுவாா்கள். இதனால் உள்ளூா் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

அரசியல் கட்சியினா் மீது பயங்கரவாதிகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதேபோல், காவல் துறையினா், செய்தியாளா்களின் வீடுகளுக்கு அவா்கள் சென்று விசாரிக்கும்போது அவா்கள் உண்மையை பேசுகிறாா்கள். இதனால் அவா்கள் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுபோன்று அச்சுறுத்தல் உள்ளவா்கள் கண்டறியப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது என்பது சிக்கலானது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு குல்காம் மாவட்டத்தில் கொல்லப்பட்ட அப்னி கட்சியின் மூத்த தலைவா் குலாம் ரசூல் லோன் வழக்கில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா்கள் அல்லது மோதலில் அழிக்கப்படுவாா்கள் என்றாா் விஜயகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com