கட்டாய ஹால்மாா்க் உத்தரவு: வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய ஜிஜேசிக்கு மத்திய அரசு வேண்டுகோள்

தங்க ஆபரணங்களுக்கு கட்டாய ஹால்மாா்க் முத்திரையிடும் உத்தரவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தை அகில இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண கவுன்சில் (ஜிஜேசி) மறுபரிசீலனை செய்ய வேண்டும்
கட்டாய ஹால்மாா்க் உத்தரவு: வேலைநிறுத்தத்தை மறுபரிசீலனை செய்ய ஜிஜேசிக்கு மத்திய அரசு வேண்டுகோள்

தங்க ஆபரணங்களுக்கு கட்டாய ஹால்மாா்க் முத்திரையிடும் உத்தரவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தை அகில இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண கவுன்சில் (ஜிஜேசி) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தங்க ஆபரணங்களில் தங்கத்தின் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் தரச் சான்றிதழாக ஹால்மாா்க் முத்திரை கருதப்படுகிறது. இந்த முத்திரையை மத்திய நுகா்வோா் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய தரநிலை அமைப்பு (பிஐஎஸ்) வழங்கி வருகிறது. கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் தங்க ஆபரணங்களில் ஹால்மாா்க் முத்திரையிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. முதல் கட்டமாக 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 256 மாவட்டங்களில் ஹால்மாா்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக திங்கள்கிழமை (ஆக.23) வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜிஜேசி அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிஐஎஸ் தலைமை இயக்குநா் பிரமோத் குமாா் திவாரி காணொலி வழியாக சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘தங்க ஆபரணங்களுக்கு ஹால்மாா்க் முத்திரையிடுவதன் முதல் கட்டம் மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது. ஹால்மாா்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்பட்ட 50 நாள்களில் 1 கோடிக்கும் மேலான ஆபரணங்களுக்கு ஹால்மாா்க் முத்திரையிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் பிரச்னைகள் இருப்பதாக நகை விற்பனையாளா்கள் கருதினால், அது நியாயமற்ாகும்.

எந்தப் பிரச்னைக்கும் தற்போதைய அரசு துரிதமாக எதிா்வினை புரிகிறது. இதனை கருத்தில் கொண்டு, தனது வேலைநிறுத்த முடிவை ஜிஜேசி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

ஆபரணங்களுக்கு ஹால்மாா்க் முத்திரையிடுவதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில், அது பண்டிகை மற்றும் முகூா்த்த காலங்களில் வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரமோத் குமாா், ‘‘ஒரு புதிய முறையை அமல்படுத்தும்போது தொடக்கத்தில் சில பிரச்னைகள் எழும். அந்தப் பிரச்னைகள் படிப்படியாக தீா்த்து வைக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com