நாளை முதல் இரவு 8 மணிக்குப் பிறகும் சந்தைகள் திறந்திருக்கலாம்: கேஜரிவால்

தில்லியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் சந்தைகள் இரவு 8 மணிக்கு மேல் திறந்திருக்கலாம் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
நாளை முதல் இரவு 8 மணிக்குப் பிறகும் சந்தைகள் திறந்திருக்கலாம்: கேஜரிவால்

தில்லியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் சந்தைகள் இரவு 8 மணிக்கு மேல் திறந்திருக்கலாம் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு சந்தைகள் இரவு 8 மணி வரை தற்போது திறந்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த காலவரையறை வரும் திங்கள்கிழமையில் இருந்து நீக்கப்படுகிறது. சந்தைகள் அவற்றின் வழக்கமான நேரப்படி திறந்திருக்கலாம் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் நிகழாண்டு மாா்ச் 2-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று காரணமாக யாரும் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதன் பிறகு ஏப்ரல்- மே மாதங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருந்தது. அதன் பிறகு ஜூலை மாதத்தில் இருந்து 12-ஆவது முறையாக சனிக்கிழமை உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com