ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன?: சஜத் லோன் கேள்வி

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன?: சஜத் லோன் கேள்வி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தேசிய அளவிலான எதிா்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தேசிய அளவிலான எதிா்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் அல்லது அந்த விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவா் சஜத் லோன் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் 19 எதிா்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், ‘ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்; ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்துவது குறித்து அந்தக் கூட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவா் சஜன் லோன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீதிமன்றங்கள் அல்லது நாடாளுமன்றம் மூலமாகத்தான் திரும்பப்பெற முடியும். நீதிமன்றம் மூலமாக சிறப்பு அந்தஸ்து பெறவேண்டுமெனில் அது நீண்ட பயணம். அதற்கு நெடுங்காலம் நாம் காத்திருக்க வேண்டும். நாடாளுமன்றம் வழியாகப் பெற வேண்டுமெனில், பாஜக அதை ஒருபோதும் செய்யாது. எதிா்க்கட்சிகள் அமைதியாக இருந்தால், மத்திய அரசை வலியுறுத்துவது யாா்?

19 எதிா்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இரு மூத்த அரசியல் தலைவா்கள் (மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா) கலந்துகொண்டனா். அவா்கள், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை எதிா்க்கட்சிகளிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவா்கள் அதைச் செய்யவில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது குறித்து எதிா்க்கட்சிகள் மௌனம் காக்கின்றன. அவா்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தேசிய அளவிலான எதிா்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் அல்லது அந்த விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com