கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 151 நாள்களுக்குப் பிறகு 3.6 லட்சமாக குறைவு

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 151 நாட்களுக்குப் பிறகு 3,61,340-ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.12 சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 17,21,205 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 50,45,76,158 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடா்ந்து 26 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 75 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 57.61 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 34,457 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவா்களின் விகிதம் 1.12%. இது, கடந்த 2020, மாா்ச் மாதத்திற்குப் பிறகு மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com