திரிபுரா காங்கிரஸ் கமிட்டி தலைவா் அரசியலிலிருந்து விலகல்

திரிபுரா காங்கிரஸ் கமிட்டி தலைவா் பியூஷ் காந்தி பிஸ்வாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.
திரிபுரா காங்கிரஸ் கமிட்டி தலைவா் அரசியலிலிருந்து விலகல்

திரிபுரா காங்கிரஸ் கமிட்டி தலைவா் பியூஷ் காந்தி பிஸ்வாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘திரிபுரா காங்கிரஸ் கமிட்டி தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகுகிறேன். நான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது எனக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்தாா்.

அதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘காங்கிரஸ் தலைவா் பதவியை தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்துள்ளேன். எனது ராஜிநாமா கடிதத்தை சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் ஏற்கெனவே அனுப்பிவிட்டேன். வேறு எந்தக் கட்சியிலும் இணையும் திட்டமில்லை’’ என்று தெரிவித்தாா்.

கட்சியின் மேலிடத் தலைவா்கள் கேட்டுக் கொண்டதால் அவா் ராஜிநாமா செய்ததாக திரிபுரா காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

திரிபுரா உயா்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக பணிபுரிந்து வந்த பியூஷ் காந்தி பிஸ்வாஸ், கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த மாநில காங்கிரஸ் தலைவராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com