குப்கா் கூட்டணி நாளை கூடுகிறது: காஷ்மீா் நிலவரம் குறித்து ஆலோசனை

ஜம்மு-காஷ்மீா் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக குப்கா் கூட்டணி வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

ஜம்மு-காஷ்மீா் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக குப்கா் கூட்டணி வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

இதுதொடா்பாக, அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

குப்கா் கூட்டணியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. முந்தைய கூட்டங்களில் கட்சிகளின் முக்கிய தலைவா்கள் மட்டும் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் கட்சிகளின் அடுத்த நிலை தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டத்தில் 150 முதல் 200 போ் வரை பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. கூட்டணியின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த பிறகு, அதை மீட்டெடுப்பதற்காக அந்த மாநிலத்தைச் சோ்ந்த 6 முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து குப்கா் கூட்டணி என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com